மு. சுயம்புலிங்கம் ஒரு தமிழக சிறுகதையாசிரியர் மற்றும் கவிஞராவார். தமிழின் வட்டார வழக்கான கரிசல் மொழியில் உள்ள இவரது படைப்புகள் இலக்கிய உலகில் கவனம்பெற்றன.
தமிழ் இந்து இதழின் யாதும் ஊரே நிகழ்வில் தமிழ்திரு 2023 விருதினைப் பெற்றார்.
தூத்துக்குடி மாநகரை அடுத்த வேப்பலோடை எனும் சிற்றூரில் பெரியபிராட்டி – முனியசாமி இணையருக்கு மகனக 1944 ஆம் ஆண்டில் பிறந்தார் சுயம்புலிங்கம்.

